Skip to content
Home » புனித அடைக்கல அன்னை திருவிழா… ஜல்லிக்கட்டு போட்டி…26 பேர் காயம்…

புனித அடைக்கல அன்னை திருவிழா… ஜல்லிக்கட்டு போட்டி…26 பேர் காயம்…

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
600 க்கும் மேற்பட்ட காளைகளும், 400 வீரர்களும் பங்கேற்றனர்..

ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
.முன்னதாக சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ

பரிசோதனை மேற்கொண்டனர். இந்த போட்டியை மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அருள் ஜோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், சேலம், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து 600 க்கு மேற்ப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும் 400 வீரர்களும் பங்கேற்றனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் 50 பேர் கொண்ட குழுவினராக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களாக களம் இறக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு சில காளைகளை வீரர்கள் அடக்கினாலும் ஒரு சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடியது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் ஈச்சம்பட்டி கிராமத்தின் சார்பில் , சைக்கிள், கட்டில், பீரோ, மின்விசிறி, டைனிங் டேபிள், பித்தளை அண்டா, சில்வர் அண்டா என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தன் சொந்த செலவில் ரொக்கப் பணமும் வழங்கினார்.
150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆல்பர்ட் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை, விழா குழு கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கல்பாளைம் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளையின் உரிமையாளர்கள் 16 நபர்களும் பார்வையாளர்கள் 05 நபர்களும்
மாடுபிடி வீரர்கள் 05 நபர்களும் காயமடைந்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *