நாக்பூர்-புனே நெடுஞ்சாலையில் இன்று காலை பேருந்து ஒன்று டிரக் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு முன்னதாக 6 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா புல்தானா மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. புனேயில் இருந்து புல்தானாவில் உள்ள மெஹேகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது வாகனங்கள் எவ்வளவு வேகமாகச் சென்றன என்பதை அந்த இடத்தில் இருந்து காட்சிகள் காட்டுகின்றன. லாரி, ஒரு தளவாட நிறுவனத்துடன் வேலை செய்தது போல் தெரிகிறது.
மேலும், உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் ஷேக் குலால், அரசு போக்குவரத்து கழக ஊழியர் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.