தஞ்சை தலைமை தபால் அலுவலகத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புபவர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு அளவுகளினால் ஆன பெட்டிகளை கொண்டு குறைந்த கட்டணத்தில் பேக்கிங் செய்து தரப்படுகிறது.
இதுகுறித்து தஞ்சாவூர் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.. .தஞ்சாவூர் தலைமை தபால் அலுவலகத்தில் வாடிக்கையாளர்கள்
வேண்டுகோளுக்கு இணங்க பார்சல் கட்டும் மையம் கடந்த 2016-ஆம் ஆண் ஜூன் மாதம் 11ம்தேதி தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புபவர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு அளவுகளினால் ஆன பெட்டிகளை கொண்டு குறைந்த கட்டணத்தில் பேக்கிங் செய்து தரப்படுகிறது.
இதுநாள் வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்த பார்சல் கட்டும் மையம் இனி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். வாடிக்கையாளர்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் மற்றும் பரிசு பொருட்கள் அனுப்புவதற்கு தஞ்சாவூர் தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள பார்சல் கட்டும் மையத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.