கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் பதவியேற்றுக்கொண்டனர். மேலும், 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில், கர்நாடக சட்டசபை வளாகத்தை காங்கிரஸ் கட்சியினர் பசுமாட்டு சிறுநீர் கொண்டு சுத்தப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் நிறைந்த பாஜக அரசு முடிவுக்கு வந்ததையடுத்து சட்டசபை வளாகத்தை பசுமாட்டு சிறுநீர் கொண்டு சுத்தபடுத்தியதாக காங்கிரசார் தெரிவித்தனர்.
கர்நாடக சட்டமன்ற வளாகத்தை…….ஹோமியத்தால் சுத்தப்படுத்திய காங்கிரசார்
- by Authour