கர்நாடக சட்டமன்ற தேர்ததில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து முதலமைச்சராக சித்தராமையா கடந்த சனிக்கிழமை (மே 19) பதவியேற்றுக் கொண்டார்.அதைத்தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மூன்று நாட்களுக்கு கர்நாடக சட்டமன்ற கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் சித்தராமையா அறிவித்து இருந்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பின் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இன்று துவங்கியது.
24 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற கூட்டத்திற்கு ஆர்வி தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ச தற்காலிக பாநாயகர் ஆர்வி தேஷ்பாண்டே தலைமையில் இன்று (மே 22) சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 224 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்கிறார்கள். ஆர்வி தேஷ்பாண்டே பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 24 ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற இருக்கிறது.