பெரம்பலூர் மாவட்டம், குன்ன வட்டம் திருமாந்துறை சுங்க சாவடி அருகே திருச்சி டு சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்யும் வாகன ஊர்தியில் பயனாளிகள் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் இவர்கள் கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர் .அதனால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக ஒரு வருட காலமாக திறக்கப்படாமல் சுங்க சாவடி நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது.
இதனால் கோடைகாலத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். இது சம்பந்தமாக பலமுறை சுங்க சாவடி நிர்வாகத்தை அணுகியும் முறையிட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் உடனே தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வராவிட்டால் சுங்க சாவடி முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்து போவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.