மயிலாடுதுறை மகாதானத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக்கடைக்கு சரக்குகளை லாரியிலிருந்து இறக்கும் வேளையில் 2 மர்ம நபர்கள் 48 மதுபாட்டில்கள் கொண்ட ஒரு பெட்டியை திருடி பைக்கில் எடுத்துக் கொண்டு பறந்தனர்.
அவர்களை விரட்டியும் பிடிக்க முடியவில்லை, இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியதால் மதுபான விற்பனை கண்காணிப்பாளர் சுரேந்திரன் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த டாஸ்மாக்கை இடம் மாற்றவேண்டும் என்று 2017ல் மயிலாடுதுறை வர்த்தக சங்க தலைவர் செந்தில்வேல் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சென்ற ஆண்டு உத்தரவானது, 6 மாதத்திற்குள் இடத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருநதது, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியுடன் கெடு முடிவடைந்துவிட்டது ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்று மதுக்கடையை தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்தினர் நடத்திவருகின்றனர், அதுவும் அரசு அனுமதியில்லாத பாருடன் இயங்கிவருவதுகுறிப்பிடத்தக்கது. இது வழக்குப் போட்ட பொதுமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.