Skip to content

நாகையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி… மாணவி தற்கொலை.

நாகை மாவட்டம், காடம்பாடி புதிய நம்பியார் நகரைச் சேர்ந்த கோபால் அவரது மனைவி இந்திரா மீனவர்களான இவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டு அதில் வரும் வருமானங்களைக் கொண்டு

இந்த நிலையில் கோபால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்க சொல்லும் பொழுது விபத்து ஏற்பட்டு ஒரு கால் செயல் இழந்ததால் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டில்
முடங்கி இருந்துள்ளார். இதனால் அவர்களது குடும்பம் வறுமையில் வாடி வந்துள்ளது அவரது மனைவி இந்திரா மீன் விற்பனை செய்து அதில் வரும் குறைந்த வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர் இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோபால் மரணப் படுக்கையில் இருந்து உயிரிழந்தார் இருந்தாலும் மனம் தளராத இந்திரா தனது மூத்த மகன் கௌதமன் மற்றும் மகள் குணாவதி ஆகியோரை நல்ல முறையில் படிக்க வைத்து வாழ்க்கையில் ஒரு முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என எண்ணியிருந்தார். கஷ்டப்பட்டு மீன் விற்பனை செய்து தனது இரண்டு பிள்ளைகளும் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு ஆளாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் தினசரி மீன் விற்பனை செய்து
மூத்த மகன் சென்னையிலும் இளைய மகள் நாகை நடராஜன் தமயந்நி மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்க வைத்தார். நேற்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்விற்கான தேர்ச்சி பட்டியல் வெளியான நிலையில் குணவதி சமூக அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். இது ஒரு புறம் இருக்க நேற்று குணாவதியின் தந்தை கோபால் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது தந்தை இறப்புக்குப் பிறகு அம்மா கஷ்டப்பட்டு படிக்க வைத்த நிலையில் நாம் 10 ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து விட்டோம் என்ற மன உளைச்சலில் இருந்ததாக தெரிய வருகிறது இன்று காலை மணியளவில் இந்திரா மீன் வியாபாரத்திற்காக தொழிலுக்கும் செல்லும் சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்கொலை சம்பந்தமாக நாகை காவல்துறையினர் வழக்கு பதிவு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தந்தை இழந்த மன உளைச்சல் மற்றும் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *