திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெருவில் வசிக்கும் விஜயசாரதி என்பவரது மனைவி செல்வி, அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில், தனது கணவர் விஜயசாரதியை, கடந்த 5-ம் தேதியன்று திருச்சி சிவாவின் மருமகன் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், திருச்சி மேற்கு தாலுக்கா அலுவலகம் எதிரில் சிலருடன் இணைந்து கடுமையாக தாக்கியதாகவும், அதில் மயக்கமடைந்த விஜயசாரதி திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், மயக்கம் தெளிந்த பிறகு தனக்கு நடந்த விவரத்தை கூறியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இருசக்கர வாகனத்தைத் திருடியவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றபோது தானும் உடன் சென்றதாகவும தெரிவித்துள்ளார். எவ்வித முகாந்திரமும் இல்லாமல் தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரம் தனது மாமனார் வீட்டின் மீது நேருவின் ஆதரவாளர்கள் தாக்கியது தொடர்பாக தான் தொடர்ந்த வழக்கில் அந்த காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வண்டியை திருடியவன் மீது ஒரு வழக்கு, பிடித்துக் கொடுத்தவன் மீது ஏழு வழக்கு, எங்கள் வீட்டை தாக்கியவர் மீது என்ன வழக்கு இது நகைச்சுவையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் முத்துக்குமார் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையை நாடியபோது ஜூன் 2ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி பின் ஜாமின் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி எம்பி சிவா வீட்டினை தாக்கிய போது, இந்த விவகாரம் தொடர்பாக அவரது மருமகன் வழக்கறிஞர் முத்துக்குமார் தனியாக ஒரு வழக்கினை தொடர்ந்த செய்த நிலையில், தற்போது முத்துக்குமார் மீது அதே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.