அரியானா மாநிலத்தில் உடல் எடை அதிகம் கொண்ட போலீசார் களப் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும் வரை காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள் எனவும் அரியானா மாநில உள்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார். குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ள அவர், இந்த நடவடிக்கையின் மூலம் அரியானாவை குற்றமில்லதா மாநிலமாக மாற்ற முடியும் எனவும் தெரிவித்தார். இதே போல் அசாம் மாநிலத்தில் உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வராத காவல்துறையினர் 3 மாதங்களில் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அசாம் அரசு அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.