திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 வருடமாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
11வது வருடமான 2023 யில் ஆங்கில பிரிவில் 100% , தமிழ் பிரிவில் 98% சதவிதம் பெற்று உள்ளார்கள்,
பள்ளியில் அதிக மதிப்பெண் (418) எடுத்த மாணவி மீரா ஜாஸ்மின்யிற்கு பள்ளி தலைமையாசிரியை திருமதி எழிலரசியும், வகுப்பு ஆசிரியை ஆர்.சந்திராதேவியும் இனிப்பு வழங்கினார்கள்.
இதனை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர். எழிலரசி, ஆசிரியர்கள் ஆர்.சந்திராதேவி, வினோதினி, நர்மதா ரீனா, ராணி, மோட்சராணி, அருணா மற்றும் மாணவ மாணவிகளுக்கு
மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோ,மற்றும் நிர்வாகிகள் பாராட்டி , இனிப்புகள் வழங்கினார்கள்.
மக்கள் சக்தி இயக்கம் சார்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்ளப்பட்டது.