கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு சணப்பிரட்டி பேருந்து நிறுத்தம் அருகில் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை பணியினை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாயனூர் கனகா காலனி பகுதியில் புதிய நாடக மேடை அமைக்கும் பணிக்கு ரூபாய் 8.75 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை பணியை எம் எல் ஏ தொடங்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், தெற்கு மாநகர பகுதி திமுக
செயலாளர் சுப்பிரமணியன், 13 வது வார்டு கவுன்சிலர் சரண்யா குழந்தைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.