பெரம்பலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.67% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 4288 மாணவர்கள் ,3905 மாணவிகள் என மொத்தம் 8193 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 7852 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி விழுக்காடு பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடதக்கது. மேற்கண்ட தகவலை கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.