திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (45). இவர் இன்று மதியம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்கின்ற தனியார் பேருந்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தார்.
அப்போது ராங் ரூட்டில் வந்த அந்த தனியார் பேருந்து அவரை கவனிக்காமல் வண்டியை எடுத்துவிட்டார். இதனால் முன்பக்க படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்த நிர்மலாவின் இரண்டு கால்களிலும் பின்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கின. வழியில் அலறி துடித்த அவரைக் கண்டு அப்பகுதி இருந்த மக்கள் கோபமடைந்து டிரைவர் மற்றும் கண்டக்டர்களை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த நிர்மலாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இச்சம்பத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டது.