கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 20ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. இதில் எதிர்க்கட்சி முதல்வர்கள் பலர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இந்த விழாவில் பங்கேற்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் இன்று மதியம் போனில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பேசினர். அப்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.