Skip to content
Home » ரெட்டிமாங்குடி சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி

ரெட்டிமாங்குடி சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே  உள்ள ரெட்டி மாங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சப்பர தேர் பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சப்பர தேர் பவனியை முன்னிட்டு கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நவநாள் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு தந்தைகள் சிறப்பு திருப்பலி நடத்தி வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான  சப்பர தேர் பவனி  நேற்ற இரவு நடைபெற்றது. முன்னதாக சந்தியாகப்பர் ஆலயத்தில் கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு முனைவர் பேரருட்திரு அமிர்தசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து சப்பர தேர் பவனி நடைபெற்றது. இந்த தேர் பவனியானது முக்கிய வீதிகளில் வலம் வந்து இன்று காலை 8 மணிக்கு ஆலயத்தை அடைந்தது.

இதில் வந்தலை பங்குத்தந்தை பிரபாகரன், புதூர் உத்தமனூர் பங்குத்தந்தை அடைக்கலராஜ், பாடாலூர் பங்குத்தந்தை மார்சலின் அந்தோணி ராஜ்,கபிரியேல்புரம் பங்கு தந்தை அகஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த சப்பரத் தேர் பவனியில் ரெட்டி மாங்குடி ,தச்சங்குறிச்சி, குமுளூர், சிறுகனூர், பி. கே.அகரம், பெருவளப்பூர் சங்கேந்தி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *