கர்நாடக மாநில தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரும் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டனர். புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கடந்த 5 நாட்களாக நடந்து வந்த நிலையில் டில்லியில் இன்று புதிய முதல்வர் தேர்வில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்படி சித்தராமையாவே மீண்டும் முதல்வர் ஆகிறார். இதுபற்றி காங்கிரஸ் மேலிடம் இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.நாளை(வியாழன்) அல்லதுசனிக்கிழமை முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.