பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதோடு உறுப்பினர்களின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராகவும் ஆனார். ஆனாலும் தான் ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாக தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கினார். மேலும் தனது பங்குக்கு புதிய பொறுப்பாளர்களையும் நியமித்தார். இது ஒருபுறம் இருக்க அ.தி.மு.க. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த ஒற்றை நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் இன்று கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை கழக நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிவி தினகரன் தெரிவித்துள்ள நிலையில் இந்த கூட்டத்திற்கு பிறகு இது தொடர்பாக ஓபிஎஸ்சும் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிகிறது..