திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஒக்கரை கிராமம் இந்த ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வளர்ச்சித் துறை திட்டத்தின் கீழ் பணிபுரியும் 100 நாள் பணியாழ்கள் வழக்கம் போல் இன்று காலை பணிக்கு சென்றனர் ஊராட்சி மன்ற தலைவர் மேகலா ஒரு சாராருக்கு மட்டும் 100 நாள் பணி வழங்கவில்லை என சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் காலை 8 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை பணி செய்யாமல் அமர்ந்தவர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் மேகலா பேச்சு வார்த்தை வரவில்லை என தெரிகிறது மேலும் இவர்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளி பொங்கல் ஆகிய தினங்களில் பணி செய்த கூலி வரவில்லை இதுவரை வழங்கப்படவில்லை எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை அங்குள்ள சமூக ஆர்வலர்கள் சில பேர் ஊராட்சி மன்றத்திற்கு அழைத்துச் சென்று தலைவர் மேகலாவிடம் காரணங்களை கேட்டறிந்தனர் மேலும் உடனடியாக அவர்களது நிலுவையில் உள்ள கூலியை தருவதாகவும் பணி வழங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தொலைபேசியில் மூலம் உறுதி அளித்துள்ளார் அதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் மாராடியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டத்து.