பெரம்பலூர் மாவட்டம் அரனாரை திருவள்ளுவர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ( லேட் ) அவரது மனைவி இராமாயி 75 வசித்து வருகிறார். இந்நிலையில் கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆகின்றது எனவும் இவருக்கு நீலம்மாள் மலர்ஜோதி மகேந்திரன் என இரண்டு பெண்கள் ஒரு மகனும் உள்ளனர் இராமாயி தனியாகவே வசித்து வருகிறார் . வயது முதிர்ந்தவின் காரணமாகவும் தன் பிள்ளைகள் யாரும் தன்னை பார்க்காமல் இருப்பதாலும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு இருப்பதாலும் இடுப்பு எலும்பு தேய்மானம் ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்ததாலும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. தன்
ஆஸ்பெஸ்டாஸ் வீட்டின் முன்பு அரை லிட்டர் கேனில் உள்ள மன்னனையை தன்மேல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு இறந்துள்ளார் இச்சம்பவத்தை கேள்விப்பட்ட பெரம்பலூர் போலீசார் சம்பவத்திற்கு சென்று கிரகத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். பத்து மாசம் சுமந்து பெற்ற பிள்ளைகள் தாயை கவனிக்காமல் இருந்த காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஏற்பட்டு தாய் தீக்குளித்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.