சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராய நகர் தொகுதியில் ரயில் நிலையம் முதல் தி நகர் பஸ் ஸ்டாண்ட் நகர் வரை ஸ்கை வாக் (Skywalk) மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைக்கிறார்.
இதனையடுத்து, Skywalk மேம்பாலத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று திறந்து வைப்பதை முன்னிட்டு நேற்று மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர். ராதாகிருஷ்ணன் IAS மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மலர் பகுதி செயலாளர் ஏழுமலை,மாமன்ற உறுப்பினர் ராஜா அன்பழகன் ஆகியோர் உடன் கலந்துகொண்டனர்.