கோவையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் காரில் வந்த மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்று அப்பெண்ணை தரதரவென இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா. இவர் இன்று காலை ஜீவி ரெசிடென்சி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அந்நிலையில் அவரை வெள்ளை கார் ஒன்று பின் தொடர்ந்து வந்துள்ளது. அப்போது கௌசல்யாவிற்கு அருகில் வரும்போது காரில் இருந்த மர்ம நபர்கள் கௌசல்யா கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது
கௌசல்யா செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் சிறிது தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து அந்த கார் அப்பகுதியில் நிற்காமல் சென்றுவிட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.