விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் எக்கியார் குப்பம் மீனவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கள்ளசாராயம் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு
முழுவதும் தேர்தல் வேட்டை நடத்தவும் , வனப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் மாவட்ட எஸ்.பி.களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களை ’முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களிடம் நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.