திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் கட்டுபாட்டில் 54 கடைகள் கட்டப்பட்டுள்ளது – இதில் 35 கடைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொது ஏலம் விடப்பட்டு – 60 சதுர அடி உள்ள ஒரு கடைக்கு மாதம் 35 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையும் – 80 சதுர அடி உள்ள கடைக்கு 60 முதல் 80 ஆயிரம் வரையும்
வாடகை வசூல் செய்யப்பட்டு வருவதால் தாங்கள் பன்மடங்கு நஷ்டம் அடைவதாக கூறி சத்திரம் பேருந்து நிலையத்தில் கடை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் சுமார் 20-க்கும் அதிகமானோர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
திருச்சி மாநகராட்சி கடை வாடகையை குறைக்கவில்லை என்றால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். கடை வாடகை மட்டும் அல்லாமல் முன் பணமாக மாநகராட்சியில் 10 லட்சம் ரூபாய் வரை கட்டி உள்ள நிலையில் தொடர்ந்து கடன் சுமைக்க ஆளாவதாக வேதனை தெரிவித்தனர்.