கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரமணமுதலிபுதூர் பிரிவு நாக பிள்ளையார் கோவில் எதிரில் நேற்று இரவு பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவ்டாட் மான்ஜி (31) த.பெ.நாகினாமான்ஜி பைரட்வா, சாம்ப்ரான் பீகார் மாநிலம் சிவ்டாட் மான்ஜி கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரமண முதலிபுதூர் பிரிவு அருகே உள்ள ராமகிருஷ்ணா என்டர்பிரைசஸ் என்ற காலிபாட்டில் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.நேற்று பணி முடித்தவுடன் இரவில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வருவதாக கூறி சென்றவரை அடையாளம் தெரியாதவர்கள் மரக்கட்டையால் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வால்பாறை துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,வட மாநில தொழிலாளி அடுத்த கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.