திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் ஆண்டவன் பாடாசாலை செயல்பட்டு வருகிறது – இந்த குருகுல பாடசாலையில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறுவர்களும் வேதம் கற்று வருகின்றனர்.
பொதுவாக பாட சாலையில் பயிலும் மாணவர்கள் ஆற்றில் குளிப்பது வழக்கம் என கூறப்படுகிறது – இந்நிலையில் நேற்று ஸ்ரீரங்கம் வடக்கு பகுதியில் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் அதிகாலை ஆண்டவன் பாடசாலையில் பயின்ற 4 பேர் குழிக்க சென்றுள்ளனர் – இதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்கிற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்,நேற்றே அவரது உடல் மீட்கப்பட்டது.
மேலும் அச்சிறுவனுடன் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆந்திராவை சேர்ந்த அபிராம் (வயது 13) – மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத் ( 14) ஆகியோரை தீயணைப்புத் துறையினர் நேற்று காலை முதல் தீவிரமாக தேடி வந்தனர் – ஏறத்தாழ 24 மணி நேரத்தில் கடந்து தற்போது சிறுவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதால்
நேற்று மாலை முதல் கொள்ளிடம் ஆற்றில் திறந்த விடப்படும் நீரின் அளவு முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது – சிறுவர்களின் உடலை மீட்கும் வரை கொள்ளிட மாட்டில் முற்றிலுமாக நீர் திறக்கப்படாது என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் 11:00 மணியளவில் மன்னார்குடியை சேர்ந்த மற்றொரு சிறுவன் ஹரி பிராசாத்தின் உடல் மீட்கப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த அபிராம் உடலை தேடும் பணிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.