விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் எக்கியார் குப்பம் மீனவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கள்ளசாராயம் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் வேட்டை நடத்தவும் , வனப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் மாவட்ட எஸ்.பி.களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரை சந்திக்க விழுப்புரம் முண்டியம்பாக்கம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற உள்ளார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் முதலமைச்சர் விழுப்புரம் விரைகிறார்.