கனகபுராவில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் 1 லட்சத்து 21 ஆயிரத்து 595 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் அசோகா படுதோல்வி அடைந்ததுடன், டெபாசிட்டையும் இழந்தார். வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு தொகுதிக்கு ஒரே முறை மட்டுமே சென்ற டி.கே.சிவகுமார் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தார். வருணா தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் சோமண்ணாவை 46 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஷிகோன் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், சென்னபட்ணா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். அதேவேளையில் குமாரசாமியின் மகன் நிகில் ராம்நகரில் தோல்வி அடைந்தார்.