கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது…இந்த தேர்தலில் பாஜவைச் சேர்ந்த தோல்வி அடைந்த 14 அமைச்சர்கள்..
கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர், முத்தோள் தொகுதி – தோல்வி
ஆர்.அசோக், வருவாய்த்துறை அமைச்சர், டி.கே.சிவகுமாரை எதிர்த்து சன்னபட்னா தொகுதி – தோல்வி; பத்மநாபநகர் தொகுதி – வெற்றி.
பி.ஸ்ரீ.ராமுலு, போக்குவரத்துத் துறை அமைச்சர், பெல்லாரி ஊரகம் – தோல்வி.
முருகேஷ் நிராணி, தொழில்துறை அமைச்சர், பீளகி தொகுதி – தோல்வி.
வி.சோமண்ணா, வீட்டு வசதி துறை அமைச்சர், வருணா தொகுதி, சாம்ராஜ் நகர் – 2 இடங்களிலும் தோல்வி.
டாக்டர் சுதாகர், சுகாதாரத்துறை அமைச்சர், சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதி – தோல்வி.
ஹாலப்பா ஆச்சார், சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர், எல்புர்கா தொகுதி – தோல்வி.
எம்.டி.பி.நாகராஜ், சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர், ஒசகோட்டை தொகுதி – தோல்வி.
கே.சி.நாராயண கவுடா, விளையாட்டுத்துறை அமைச்சர், கிருஷ்ணராஜ் பேட் தொகுதி – தோல்வி
பி.சி.பாட்டீல், விவசாயத் துறை அமைச்சர், ஹிரேகேரு தொகுதி – தோல்வி.
ஜே.சி.மாதுசாமி, சட்டத்துறை அமைச்சர் – சிக்கநாயகனஹள்ளி தொகுதி – தோல்வி
சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, சிர்சி தொகுதி – தோல்வி
பி.சி.நாகேஷ், கல்வித்துறை அமைச்சர்- திப்தூர் தொகுதி – தோல்வி!
சங்கர் மூனனேகுப்பா, துணி நூல் துறை அமைச்சர் நாவல்குண்ட் தொகுதி – தோல்வி.