தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சியின் வாயிலாக திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், குத்துவிளக்கேற்றி வைத்து அலுவலகத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன், வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், வட்டாட்சியர் கலைச்செல்வி உள்ளிட்ட வருவாய் துறை அலுவர்கள் கலந்து கொண்டனர்.