கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 134 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை பெங்களூருவில் உள்ள ஹில்டன், ஹயாத் ஆகிய ஓட்டல்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அங்கு எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி முதல்வரை தேர்வு செய்கிறார்கள்.
அநேகமாக முன்னாள் முதல்வர் சித்தராமையா முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது. மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரை முன்மொழிவார் என்றும் கூறப்படுகிறது.
முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளராக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் தலைமையில் 2பேர் நாளை பெங்களூரு வருகிறார்கள். அவர்கள் முன்னிலையில் புதிய முதல்வர் தேர்வு நடக்கிறது.