கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. தேர்தலுக்காக ஆங்காங்கே பாஜக தேர்தல் அலுவலகங்கள் திறந்திருந்தன. இன்று காலை ஷங்கான் தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்தி ல் தொண்டர்கள் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள காத்திருந்தனர். அப்போது அங்கு ஒரு நாகப்பாம்பு புகுந்தது. இதனால், தேர்தல் அலுவலகத்தில் இருந்த பாஜகவினர் அலறியடித்து வெளியே ஓடினர். இது குறித்து உடனடியாக போலீசார், வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாஜக அலுவலகத்தில் இருந்த நாகப்பாம்பை மீட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பாஜக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
