கர்நாடகத்தில் பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றவர் ஜனார்த்தன ரெட்டி, பல்வேறு சுரங்க ஊழல்களில் ஈடுபட்டதால் அவர் கட்சியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா (கேஆர்பிபி) என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கினார். இந்த கட்சி சார்பில் அவர் கங்காவதி தொகுதியில் போட்டியிட்டார். அதில் ஜனாத்த்தன ரெட்டி வெற்றி பெற்றார். இவர் தவிர மாலூர், அப்சல்புரி, கவுரிபிதனூர், பதரஹள்ளி ஆகிய 4 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னணியில் உள்ளனர்.