கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. இதற்காக அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூருவில் முகாமிட்டுள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டம் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா தன்னுடைய தந்தையை முதல்வர் ஆவார் என்று பேட்டி அளித்தார்.
இதற்கு, மாநில தலைவர் டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சி அலுவலகத்தில் திரண்ட அவர்கள் சிவக்குமார் தான் அடுத்த முதல்வர் என முழக்கமிட்டனர். மாநிலத்தில் கட்சியை கட்டிக்காத்து வந்த சிவக்குமாரைத் தான் அடுத்த முதல்வர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.