திருச்சி,அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியாபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் என்ற இடத்தில் சாலையின் ஓரத்தில் 40 டன் கிரேன் நின்றுள்ளது. அப்போது திடீரென கிரேக்கத் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் டால்மியாபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர். கல்லக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேன் யாருடையது எதனால் தீவிபத்து ஏற்பட்டது என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.