புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நெப்புகை ஊராட்சி நெப்புகை கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சூரப்பிரியா அம்மன் கோவில் கிடாவெட்டு மது எடுப்பு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நெப்புகை முள்ளிக்காப்பட்டி பெரியமண கொள்ளை ஒத்த வீடு உரியம்பட்டி வேலாடிப்பட்டி சிவந்தான்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டு நல்ல மழை பெய்து. விவசாயம் செழிக்கவும்உலக அமைதி வேண்டிய மது எடுத்து முளைப்பாறியை சுமந்துபெண்கள் அவரவர் கிராமத்தில் இருந்து நெப்புகையில் அமைந்துள்ள ஸ்ரீ சூலபிடாரி அம்மன் ஆலயத்திற்கு திரளாக வருகை
தந்து கும்மி அடித்து கோலாட்டம் போட்டு சூழப்பிடாரி அம்மனை வணங்கினார்கள் இந்த நிகழ்வில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்விழாவில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் விழாவிற்கான முன்னேற்பாடுகளை நெப்புகை ஊராட்சியை சேர்ந்த கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது