இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ,நாட்டை நாசமாக்கும் பாஜக அரசை அகற்றுவோம், இந்தியாவை பாதுகாப்போம் ,என்று இந்தியா முழுவதிலும் நாடு தழுவிய நடை பயண பிரச்சார இயக்கம் மே மாதம், ஐந்தாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை, நடக்க இருக்கிறது .அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூரில் பேருந்து நிலையத்தில் பிரச்சார இயக்க துவக்க விழா நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமுமுக, மதிமுக, திராவிட கழகம், மக்கள் மறுமலர்ச்சி கழகம், உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணியினர் கலந்து கொண்டு பிரச்சாரத்தை துவக்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நாற்காலிகள் போட்டு நிகழ்ச்சி நடத்த காவல்துறையிடம் உரிய அனுமதி வாங்கவில்லை என கூறி காவல்துறையினர் நாற்காலிகளை அகற்ற கூறியதால் கட்சியினருக்கும் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் சந்திரகுமார் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்
தொடர்ந்து காவல் ஆய்வாளர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்து சென்றார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரம் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர். பின்பு பிரச்சார பயணம் தொடங்கி நடைபெற்றது இதனால் பேருந்திற்கு காத்திருக்கும் பயணிகள் பேருந்து நிலையத்தின் நிழலில் நிற்க முடியாமல் கடும் வெயிலில் பேருந்து நிலையத்தின் வெளியில் நின்று பேருந்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மக்களுக்காக போராடும் கட்சிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இப்படியான இடங்களில் கூட்டங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.