கரூர் ஒன்றியம், இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் அவர்கள் பயிற்சி முகாமை துவங்கி வைத்தார். பாவலர் கல்யாணசுந்தரம் நாடகக் கலை குறித்து பயிற்சி வழங்கினார். கவிஞர் காகம் ராஜா கவிதை எழுதுவது குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது சிறந்த ஹைக்கூ கவிதை எழுதிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. கிளை நூலகர் மோகனசுந்தரம் நன்றி கூறினார். தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகள், ஓவியப் பயிற்சி, மனவளக்கலை பயிற்சி,
ஒழுக்கம் மற்றும் பண்பாட்டுக் கல்வி, அடிப்படை கணினி பயிற்சி, தமிழ் வாசிப்பு பயிற்சி, தமிழ் நாப்பழக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. வாசகர்கள், குழந்தைகள், இல்லம் தேடிக் கல்வி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.