திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகலில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயிலில் ஒன்று அன்னை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 26 ஆம் நாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும் நிகழ்ச்சி மேலும் அன்று இரவு அமராவதி ஆற்றங்கரையிலிருந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து திரு உலா வீதி வழியாக ஐந்து முக்கு சந்திப்பு, சோளக்கடை வீதி, பழைய காவல் நிலையம் வீதி வழியாக
கடைவீதியில் வந்து கொண்டிருந்தது அப்போது அம்மனை சிறப்பாக அழைத்துச் செல்வதற்காக அந்த கோவிலின் பக்தர்கள் அம்மனை அழைத்து வர கத்தி போட்டு அம்மனை கன்னட மொழியில் ஆக்ரோசமாக அழைத்து பக்தியுடன் அழைத்து பெரிய கடை வீதி வழியாக காவல் நிலையம் மீதி அருகே உள்ள கண்ணன் நகரில் அன்னை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சாமியை அழைத்து வைத்து சிறப்பு ஆராதனை பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.