நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலம் புழுதிக்குடியில் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சிவன் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் 12 ஆண்டுகளுக்கு நடைப்பெற்ற கும்பாபிஷேக விழா கடந்த 8 ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லெஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி , தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்று வந்தது. இன்று நான்காம்கால யாகசாலை
பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவாச்சாரியார்கள் கடங்கங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க மூலஸ்தான கலசங்களுப்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அபிமுக்திஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்கங்களுக்கு மகா தீபாரதனை நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்