திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள தவுட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்திகா(17) கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக மன உளைச்சலில் இருந்த பள்ளி மாணவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாதக கூறப்படுகிறது. தகவலறிந்த புலிவலம் போலீசார் அவரது வீட்டுக்கு நேரில் சென்று கீர்த்திகாவின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் இது தொடர்பாக புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.