நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்ட ட்விட்டில், நிதி அமைச்சர் பொறுப்பு 2 ஆண்டுகள் வழங்கிய முதல்வருக்கு வாழ்த்து. தற்போது நம்பர் 1 நிலையில் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறையை வழங்கிய முதல்வருக்கு நன்றி. கடந்த 2 ஆண்டுகள் என் வாழ்வின் நிறைவான ஆண்டுகள். தகவல் தொழில் நுட்பத்துறையை மீண்டும் நம்பர் 1 நிலைக்கு கொண்டு வர பாடுபடுவேன். நிதி அமைச்சராக இருந்தது என் வாழக்கையின் மிகச்சிறப்பான பகுதி. தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.