கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிந்த கையோடு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை.
ஜான் கி பாத் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 94 முதல் 117 இடங்களும், காங்கிரசுக்கு 91 முதல் 106 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 14 முதல் 24 இடங்களும், டிவி 9 கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 88 முதல் 98 இடங்களும், காங்கிரசுக்கு 99 முதல் 109 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 4 இடங்களும், நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114, காங்கிரசுக்கு 86, மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 21, ஜீ நியூஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 79 முதல் 94 இடங்களும், காங்கிரசுக்கு 103 முதல் 118 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 25 முதல் 33 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கருத்துக்கணிப்புகளில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் வித்தியாசம் அதிகளவில் இல்லாததால் இந்த தேர்தல் கடுமையான போட்டியாக பார்க்கப்படுகிறது. அதேபோல் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்ற சூழ்நிலையையும் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.