கோவை, பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் துவக்கப்பள்ளியில் பள்ளி விடுமுறை காரணமாக வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம் உள்ளிட்டவைகளில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் வழக்கம் போல கட்டிட தொழிலாளர்கள் பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சமையலறை பகுதிக்குள் திடீரென ஒரு பொந்தில் இருந்து பாம்பு தென்பட்டது. இதனை கண்டு பயந்த தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல்
கொடுத்தனர்.
இதனை அடுத்து பாம்பு பிடிப்பதில் நன்கு பயிற்சி பெற்ற ஆனைமலையைச் சேர்ந்த தன்னார்வலர் பாஷா மூலம் பொந்தில் மறைந்திருந்த 5 அடி நீளமுள்ள நாக பாம்பை நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு லாபகமாக பிடித்து குடத்தில் அடைக்கப்பட்டு வனத்துறையினரிடம் கொடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட பாம்பு பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது. பள்ளி வளாகத்திற்குள் பாம்பு பிடிபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.