Skip to content
Home » பிளஸ்2 ரிசல்டில் அலட்சியம்… 100க்கு 138 மார்க் வழங்கிய கல்வித்துறை

பிளஸ்2 ரிசல்டில் அலட்சியம்… 100க்கு 138 மார்க் வழங்கிய கல்வித்துறை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சூரக்குளத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 19). கடந்த 2021-ல் திருநகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 17 வயதில் ஆர்த்தி பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது இவர் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வை, தனித்தேர்வராக எழுதி இருந்தார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து ஆர்த்தி தனது தேர்வு முடிவை ஆன்லைனில் பார்த்தார். அப்போது தமிழில் 100-க்கு 138 மதிப்பெண் என்று பட்டியலில் அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் மதிப்பெண் பட்டியலில் ஆங்கில பாடத்தில் 100-க்கு 92, கணிதத்தில் 56, இயற்பியலில் 75, வேதியியலில் 71, உயிரியலில் 82 என்று தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்று இருந்தார். மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 514 என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என 4 பாடங்களில் அவர் தேர்ச்சி பெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது மாணவியை மட்டுமல்ல அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100-க்கு 138 மதிப்பெண் இடம்பெற்று இருப்பது பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. தன் மதிப்பெண் பட்டியலில் ஏற்பட்டுள்ள பிழைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என மாணவி ஆர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ரிசல்ட் வெளியிட தாமதம் ஆனதில் இருந்து அடுத்தடுத்து பள்ளிக்கல்வித்துறையில்  தீராத குழப்பம் நீடிக்கிறது. மொத்த மதிப்பெண் 100 என்ற போதிலும் தமிழில் 100க்கு 138 மதிப்பெண் வழங்கியதை எங்கே போய் சொல்வது என தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!