கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த வரிக்கட்டியை சேர்ந்த பழனிச்சாமி தனது மாமியார் பரமேஸ்வரிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், மனைவி ஜெயமணி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் மாமியார் பரமேஸ்வரி வீட்டில் கம்பி கட்டும் வேலை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். கடந்த 8.05.2023-ம் தேதி இரவு அனைவரும் தூங்கிவிட்டு, நேற்று 9.5.2023-ம் தேதி காலை 6 மணியளவில் எழுந்து பார்த்தபோது இரண்டாவது மகள் ஆத்யா மற்றும் மாமியாரை காணவில்லை என்று அக்கம் பக்கம் தேடிப் பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் உள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றின் ஓரத்தில் கரையை பிடித்துக் கொண்டு தனது மாமியார் குழந்தையுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அருகில் உள்ளவர்கள் உதவியுடன் குழந்தையை கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மருத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவிட்டு, அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.