மாநில அளவிலான ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டி நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத் துறை ஆபிதீன் பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி தயானா ஸ்ரீ முதல் பரிசும், பிரதிக்ஷா இரண்டாம் பரிசும் பெற்றனர். இதேப் போன்று சென்னையில் நடந்த யோகாப் போட்டியில் முதல் பரிசை 2 பேரும், இரண்டாம் பரிசை 7 பேரும் பெற்றனர். போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.