திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தின கூலி தூய்மை பணியாளர்கள் 54 பேருக்கு வழக்கத்தை விட குறைவான சம்பளம் கொடுப்பதனை கண்டித்து 30 பெண்கள் உள்ளிட்ட 54 தினக்கூலி தூய்மை பணியாளர்கள் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லால்குடி நகராட்சி அலுவலகத்தில் 31 நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் 54 தின கூலி பணியாளர்கள் என மொத்தம் 85 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் தினக்கூலி தூய்மை பணியாளர்கள் தின கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.470 என சம்பளம் வாங்கி வந்த நிலையில் திடீரென நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் மட்டுமே தின கூலியாக சம்பளம் வழங்கப்படும் எனவும் அதே வேளையில் எட்டாம் வகுப்பு மேல் படித்திருப்பவர்களுக்கும் , 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் பணி வழங்கப்படாது என கூறியும் இதற்கு விருப்பப்பட்டால் பணியாற்றலாம் இல்லையென்றால் வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து செல்லலாம்
என அதிகாரிகள் கூறியதால் ஆத்திரமடைந்த தினக்கூலி தூய்மை பணியாளர்கள் இன்று காலை பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைனை அறிந்த நகராட்சி ஆணையர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது வழக்கமான சம்பளங்கள் வழங்கப்படும் எனும் அரசு உத்தரவு பிறப்பிக்கும் வரை உங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என கூறியதன் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தினை கைவிட்டனர் .
இது குறித்து தினக்கூலி தூய்மை பணியாளர் பழனியம்மாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
சிறு வயது முதலே இந்த நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதாகவும், வாரிசு அடிப்படையில் வழங்கக்கூடிய வேலை கூட எனக்கு வழங்கவில்லை எனவும் தொடர்ந்து குறைவாகவே சம்பளம் கொடுத்து வந்த நிலையில் அப்போதைய பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த குமரன் என்பவர் தான் எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்தார் எனவும் அதன் பின்பு வந்த அதிகாரிகள் எங்களுக்கு சம்பளம் உயர்த்தி கொடுக்கவில்லை எனவும் ஆனால் நாங்கள் வாங்கிய 480 ரூபாய் சம்பளத்தை 300 ஆக குறைத்து வழங்குவது எந்த வகையில் நியாயம் எனவே சம்பளத்தை குறைத்தால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்…