கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், கடலில் 30-க்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக படகு உரிமையாளர் நாசர் என்பவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். படகு பயணம் விதிமுறைகளை மீறி உள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனிடையே, விபத்து நடைபெற்ற இடத்திற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் இந்த விபத்து தொடர்பாக பேசிய பினராயி விஜயன், நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாகவும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் கூறினார். இதற்கிடையே படகு உரிைமயாளர் தலைமறைவாகி விட்டார்.