தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியானது. இந்த நிலையில் கரூரில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் நேரடியாக பள்ளிக்கு வருகை தந்து, தங்களது தேர்வு முடிவுகளை ஆன்லைன் மூலம் பார்த்து செல்கின்றனர். இதில் ஏராளமான
மாணவர்கள் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த சந்தோஷத்தை சக நண்பர்களுடன் இணைந்து உற்சாகத்துடன் துள்ளி குதித்து தங்களது சந்தோஷத்தை கொண்டாடினர்.